நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக மாறிய பெங்களூரு விமான நிலையம்.!
கொரோனா வைரஸ் காரணமாக விமானத் துறையில் முடங்கி உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக மாறியுள்ளது. இரண்டாவது இடத்தை இதுவரை மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் பெற்று வந்தது.
சமீபத்தில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் 2020-2021 முதல் காலாண்டிற்கான புள்ளிவிவரங்கள் இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. அதில், ஏப்ரல் முதல் ஜூன் வரை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 4, 54, 704 சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் பயணம் செய்தனர்.
அதே நேரத்தில் மும்பையில் 3, 19, 412 பயணிகளும் , டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 12, 31, 338 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பட்டியலில் கொல்கத்தா விமான நிலையம் கூட மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், மும்பை நான்காவது இடத்தில் உள்ளது.
KIA அதிகாரிகளின் கூறுகையில், ஜூன் மாதத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு சராசரியாக 180 ஆகும். ஆகஸ்ட் நிலவரப்படி, மொத்தம் 91 விமானங்கள் வந்துள்ளது, 94 விமான நிலையத்திலிருந்து புறப்பட்டன. இதில் வந்தே பாரத் மிஷன் விமானங்களும் அடங்கும் என கூறினார்.
கொரோனா காரணமாக, விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மூத்த விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெங்களூரு விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மே 25 அன்று மத்திய அரசு உள்நாட்டு விமானங்களை அனுமதித்ததைத் தொடர்ந்து மாநிலமும் நாட்டிற்கு விமான சேவைகளை அனுமதித்துள்ளது.
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது என கூறினார்.