புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று பந்த் மாநில செயலாளர் அன்பழகன் கைது
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்த் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதல்வர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மனக் குமுறலை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மாநில அஸ்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்திற்கு அறிவித்திருந்தார்.த முழு அடைப்பு போராட்டத்தால் புத்தாண்டு வியாபாரம் பாதிக்கப்படும் என்று திமுக ,காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.முழு அடைப்பு போராட்டமானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.