“புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்”- மத்திய அமைச்சர்

கொரோனா மேலும் பரவாமல் இருக்க புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு, அனைத்து தனிக்கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, புகையிலை போன்ற பொருட்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், புகையிலை போன்ற பொருட்கள் விற்பனையை தடை செய்யுங்கள் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025