பிரிட்டன் விமானங்களுக்கான தடை.. ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு!

Due to new coronavirus, the ban on flights from the UK will be extended until January 7, said Federal Ministry of Civil Aviation.

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7 ஆம் தேதி வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு, ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7 ஆம் தேதி வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அதன்பின் பிரிட்டனில் இருந்து வரக்கூடிய விமானங்களுக்கு படி படியாக அனுமதி வழங்கப்படும் எனவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.