சிமி இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு (SIMI) விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. இதன்காரணமாக இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) முதன்முதலில் பிப்ரவரி 1, 2014 அன்று இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசம், கேரளா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், அசாம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகள் சிமி இயக்கம் செயல்பட்டு வந்தது என கூறப்படுகிறது. சிமி அமைப்புக்கு 5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட இந்த தடையானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டும் சிமி அமைப்பு மீது 8-வது முறையாக தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலே இருக்காது… இதுவே கடைசி வாய்ப்பு – காங்கிரஸ்

அப்போது, நம் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமைக்கு எதிராக செய்லபடுவதால் சிமி இயக்கம் மீதான தடை தொடர்கிறது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், சிமி இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில்,  இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி இயக்கம் ஈடுபட்டுள்ளது.

எனவே, உபா (UAPA) சட்டத்தின் கீழ் சிமி இயக்கம் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய மாணவர்கள் இஸ்லாமிய அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வரும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

39 seconds ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

34 minutes ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

1 hour ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

2 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago