பிளாஸ்டிக் பைகள்,தட்டுகள்,கோப்பைகளுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு..!
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி,விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்(நெகிழி) பைகள்,தட்டுகள்,கோப்பை போன்ற பொருட்கள் உற்பத்தி,விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜூலை 1,2022 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்,பிளாஸ்டிக் பொருட்களால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, அவற்றை உண்பதால் மீன்கள்,பசுக்கள் போன்ற உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.இதனால்,ஏற்கனவே பல மாநிலங்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளன.இந்த நிலையில்,அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.