பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் – உச்சநீதிமன்றம்
தமிழக அரசு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்குகள் அனைத்துமே உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த அரசாணை செல்லும் என தெரிவித்தனர்.
மேலும் பேப்பர் கப் மீதான தடை குறித்து, ஒன்றிய அரசாங்கம் சில நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழிகாட்டுதலின்படி தமிழக அரசு மறுபரிசலனை செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.