இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதனிடையே மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை செப்டம்பர் 31- ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.மேலும், பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் விமான போக்குவரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது . சர்வதேச சரக்கு போக்குவரத்து விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…