பொதுமக்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதைத் தடுக்க மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது.
பொது அமைதிக்கு இடையூறு, மனித உயிர்கள், உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நடமாட்டம் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதைத் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த மும்பை காவல்துறை, பல தரப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அமைதியை சீர்குலைக்கவும், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் மனித உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் பெரும் ஆபத்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த உத்தரவு ஜூன் 11 ஆம் தேதி வரை நகரத்தில் அமலில் இருக்கும் என்று மும்பை காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நடமாட்டம் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுவது கூடாது. எந்த ஊர்வலத்திலும் ஒலிபெருக்கிகள், ஒலிபெருக்கி கருவிகள், இசைக்குழு மற்றும் பட்டாசுகளை வெடித்தல் போன்றவைக் கூடாது. இந்த உத்தரவின் ஏதேனும் மீறல் தொடர்பாக ஏற்படும் தண்டனைகளை பறிமுதல் செய்தல், அபராதம் விதிக்கப்படலாம்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…