குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்த தடை.. மீறினால் 200 அபராதம்!
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி என்ற கிராமத்தில், போதைப் பழக்கத்தை காரணம் காட்டி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நவம்பர் 11ம் தேதி கிராம சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என்று கிராம சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் அதிகப்படியான மற்றும் கட்டுப்பாடற்ற திரைநேரம், குழந்தைகள் கேம் விளையாடுவதற்கு அல்லது இணையதளங்களில் உலாவுவதற்கு போன்களைப் பயன்படுத்துவதற்கு அடிமையாகிவிட்டனர் என்று கிராம பஞ்சாயத்தின் தலைவர் சர்பஞ்ச் கஜனன் டேல் கூறினார்.
இந்த முடிவை செயல்படுத்துவது கடினம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் முதலில் ஆலோசனையின் மூலம் சவால்களை எதிர்கொள்வோம். மொபைல் பயன்படுத்தும் குழந்தைகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவில் குழந்தைகளுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தடையை அவர்கள் வரவேற்பதாக தெரிவித்தனர். மாணவர்களிடையே நல்ல பழக்கங்களை வளர்ப்பதற்கு இது ஒரு சிறந்த படியாகும். பெற்றோர்களும் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.