அதிரடி:7 ரசாயன உரங்களுக்கு தடை..!இயற்கை எரிவாயு சீர்திருத்திற்கு ம.அரசு ஒப்புதல்!

Default Image

இயற்கை எரிவாயு சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைக்க இயற்கை எரிவாயுவை சந்தைப்படுத்தல் சீர்த்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

டெல்லியில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டமானது காணொலி வாயிலாக நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

எரியாயு பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிலையை குறைக்க மின்னனு ஏலம் உள்ளிட்ட 3 புதிய சீர்த்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் உடல்நலம் மற்றும் சுற்றுச்சுழலுக்கு ஆபத்தை விளைவிக்கின்ற 7 ரசாயனப்பொருட்களை தடை செய்ய உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்