பாலசோர் ரயில் விபத்து…மக்கள் உண்மையை அறிய வேண்டும் -மம்தா பானர்ஜி.!
பாலசோர் ரயில் விபத்து குறித்து மக்கள் உண்மையை அறிய வேண்டும், இது உண்மையை மறைக்கும் நேரமல்ல என மம்தா கூறியுள்ளார்.
ஒடிசா பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டாலும் இனி இதுபோன்று விபத்து நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் பாலசோர் ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என கோரிய ரயில்வே வாரியத்திற்கு பதிலளித்த மம்தா, விபத்து குறித்த உண்மையை மக்கள் அறிய வேண்டும், இது உண்மையை மறைப்பதற்கான நேரம் அல்ல என்று கூறினார்.
நான் மீண்டும் கட்டாக் & புவனேஸ்வருக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்திக்க இருக்கிறேன், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகள் மற்றும் வேலைக்கான கடிதங்களையும் நாளை மறுதினம் (புதன்கிழமை) வழங்க இருப்பதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்தார்.