பக்ரீத் பண்டிகை.. கால்நடைகளை பலியிட வேண்டாம்… சட்டத்தை மீறினால் அதிரடி கைது.! அமைச்சர் அதிரடி.!
வரும் ஞாயிற்று கிழமை உலகம் முழுக்க இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், கால்நடைகளை பலியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் பசுவதை சட்டம் தீவிர அமலில் இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநில கால்நடை பாதுகாப்பு அமைச்சர் பிரபு சவுகான் கால்நடைகளில் ஒன்றான பசுக்களை பலியிடுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர், காவல்துறை முக்கிய அதிகாரிகள் என பலருக்கும் கடுமையாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் சவுகான் கூறுகையில், ‘ பசுக்களை கொல்லக்கூடாது என சட்டம் இருக்கிறது. அதனால் அதனை மீறினால் கண்டிப்பாக சட்டத்தை மீறுவதாக கூறி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என தெரிவித்துள்ளார்.