பக்ரீத் பண்டிகை: எல்லையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் செய்யவில்லை !
நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை போது இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டரி வாகா பகுதியில் உள்ள இரு நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பை பரிமாற்றி கொள்வது வழக்கமாக நடப்பது.
ஆனால் இன்று இரு நாட்டின் பாதுகாப்பது படை வீரர்கள் இனிப்பை பரிமாற்றி கொள்ள வில்லை.எல்லை பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு கொடுக்க தயாராக இருந்தாலும் அதை வாங்க பாகிஸ்தான் பாதுகாப்பு படைவீரர்கள் மறுத்து விட்டனர்.
நேற்றே பாகிஸ்தான் பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு பரிமாற்றம் இருக்காது என தெரிவித்தனர்.இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் வந்த ரம்ஜான் பண்டிகையின் போது இரு நாட்டு பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு பரிமாற்றம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.