பேய்ட்டி புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது…!தொடங்கியது மழை …!
பேய்ட்டி புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது .
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் பெய்ட்டி புயலானது தற்போது காக்கிநாடாவில் இருந்து தெற்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது வடக்கு திசை நகர்ந்து இன்று மதியம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று தெரிவித்தது.
இதனால் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையை பொருத்தமட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். புயல் கரையை கடக்கும் போது காக்கிநாடா பகுதியில் 90 கி.மீ முதல் 100 கி.மீ வரை காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆந்திராவில் கரையைக் கடந்தது பேய்ட்டி புயல்.காக்கிநாடா – ஏனாம் இடையே பேய்ட்டி புயல் கரையைக் கடந்தது.தற்போது அங்கு பலத்த மழை பெய்து வருகிறது .24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.