போதைப்பொருள் தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
போதைப்பொருள்தொடர்பான வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் போலீஸ் காவல் நிறைவு முடிந்ததை தொடர்ந்து இருவரையும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், 2 பேரும் ஜாமீன் கேட்டு பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி விசாரணை வந்தது. அன்று விசாரணையை நடைப்பெற்ற நிலையில், 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 19-ம் தேதி ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் கேட்டார்.
இதற்கு நடிகைகள் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், நீதிபதி ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு 21-ம் தேதி இன்று ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஜாமீன் மனு மீது விசாரணை நடக்க உள்ளது. இன்று ஜாமீன் கிடைக்குமா..? அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா? என்பது இன்றைய விசாரணை முடிவில் தெரியவரும்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…