சிதம்பரத்தின் மனு மீது பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.மேலும் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தது.சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் இந்த சமயத்தில் சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணையில் சிதம்பரத்தின் மனு மீது சிபிஐ 7 நாட்களில் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
பின்னர் சிதம்பரத்தின் காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் காவலை நீடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.பின் ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் சிதம்பரத்தின் மனு மீது சிபிஐ 7 நாட்களில் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்துள்ளது .வரும் 23ம் தேதி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில் சிபிஐ அதிரடி
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…