இனிமே இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது! மாயாவதி அறிவிப்பு!

இனிவரும் காலங்களில் இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

mayawati

சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். உ.பி.,யில், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் முடிவுகள் அவர் எதிர்பார்த்தது போல வரவில்லை என்பதால் இப்படியான குற்றச்சாட்டை  மாயாவதி முன் வைத்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில், இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய மாயாவதி, அதன் மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சதி நடப்பதாகவும் கூறினார். சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவுகள் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது என்று அவர் கூறினார்.

இது குறித்து பேசிய அவர் ” உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் பற்றி  விமர்சனங்களும் ஒரு பக்கம் எழுந்துள்ளதை அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறன். தேர்தல் நடைபெற்றபோது  முறைகேடு மற்றும் மோசடி மூலம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி போலி வாக்குகள் போடப்பட்டன.

இது ஜனநாயகத்தின் கவலை மற்றும் வருத்தத்திற்குரிய விஷயம், இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் போலி வாக்களிப்பைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, நாங்கள் இடைத்தேர்தல் எதிலும் போட்டியிட மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். அதே போல, லோக்சபா தேர்தல், மாநில சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து போட்டியிடும் என்றும் மாயாவதி கூறினார்.

மேலும், நவம்பர் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற மாநிலத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் ஆறில் வெற்றி பெற்றதன் மூலம் பாஜக எதிர்க் கட்சிகளை வீழ்த்தியது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்