பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அதன் எம்பி டேனிஷ் அலியை சஸ்பெண்ட் செய்தது அக்கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அண்மையில் டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், நேற்று பதவி பறிக்கப்பட்ட மகுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்பி டேனிஷ் அலி பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மறுநாளே பகுஜன் சமாஜ் கட்சியில் தற்காலிகமாக நீக்கி அக்கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான அறிக்கைகள் அல்லது செயல்களுக்கு எதிராக நீங்கள் எச்சரிக்கப்பட்டீர்கள்.
அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார் தெலுங்கானா முதலமைச்சர்!
ஆனால், அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், டேனிஷ் அலி தனது சொந்த ஊரான ஹபூரை விட்டு உ.பி.யில் உள்ள அம்ரோஹாவில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இது அவரது முதல் தேர்தல் போட்டியாக இருந்தபோதிலும், அலி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியான அம்ரோஹாவில் இருந்து பெரிய அளவில் வெற்றி பெற்றார். தற்போதைய பாஜக எம்பி குன்வர் சிங் தன்வாரை 63,000 க்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்கடித்தார். இருப்பினும், அம்மாநிலத்தில் பாஜக மகத்தான வெற்றி பெற்றது.
இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தவர் டேனிஷ் அலி. சமீபத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி இவரை நாடாளுமன்றத்திலேயே தீவிரவாதி என கொச்சைப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் (பிஎஸ்பி) இருந்து டேனிஷ் அலி எம்பி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…