தனது அரசியல் வரிசை அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி, தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் என்பவரை அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த மாயாவதி (வயது 67) திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும், வாரிசு அரசியலுக்கு பெயர் போனவர் மாயாவதி.
அதன்படி, தனது சகோதரர் ஆனந்த் கடந்த 2019ம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவராகவும், ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு உ.பி தவிர ராஜஸ்தான் உட்பட பிற மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் உள்ளனர். மயவாதிக்கு பிறகு யார் தலைவரை என கேள்வி எழுந்தது.
இந்த சூழலில், அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் இருப்பார் என்றும் தனக்கு பிறகு அவர் தான் பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்துவார் எனவும் மாயாவதி அறிவித்துள்ளார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து… 4 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
அதாவது, மாயாவதியின் அரசியல் வாரிசாக சகோதரர் அவரது ஆனந்த் குமாரின் மகன் 28 வயதான ஆகாஷ் ஆனந்த் இருப்பார் என அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவைதேர்தலில் ஆகாஷ் ஆனந்த் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார். இதன்பின் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய நபராக இருந்த ஆகாஷ் ஆனந்த், தேசிய ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது அவரை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார். மாயாவதி அறிமுகத்தால் 22 வயதிலேயே அரசியலில் நுழைந்தவர் ஆகாஷ் ஆனந்த். 2019-ம் ஆண்டு கட்சியின் துணை தலைவராக ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டபோதும் அந்த பதவியை ஏற்க மறுத்திருந்தார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் மயவாதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தபோதும் கட்சியின் முகமாக இருந்தவர் ஆகாஷ் ஆனந்த். கடந்த ஆண்டு முதலே ஆகாஷ் ஆனந்த் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவர் என்ற பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், தற்போது உறுதியாகி உள்ளது.
குடும்ப அரசியலை விமர்சித்து வந்த மாயாவதி, அவரது கட்சியிலும் குடும்ப அரசியல் தலைதூக்கியுள்ளது என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த உதய்வீர் சிங் கூறுகையில், மாயாவதி தனது அரசியல்வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளார். எங்கள் கட்சிக்கு இளம் தலைவர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.