Badaun double murder : உத்தரப் பிரதேச மாநிலம் படவுனில் சலூன் கடை வைத்து இருக்கும் முகமது சாஜித், நேற்று (செவ்வாய்) இரவு 8 மணியளவில், தனது பக்கத்து வீட்டுக்காரர் வினோத் தாக்கூர் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மகன்கள் 13 வயதான ஆயுஷ், 6 வயதான அஹான் என இரு சிறுவர்களையும் கூரான ஆயுதத்தால் வெட்டியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் இரு சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும் வினோத்தின் மூன்றாவது மகன் பியூஷும் சஜித்தையும் கடுமையாக தாக்கியுள்ளான் அந்த கொலைகாரன். நல்வாய்ப்பாக பியூஸ் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளான். தற்போது சிறுவன் பியூஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த இரட்டை கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் சலூன் கடைக்கு தீ வைத்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராடினர். பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய உ.பி போலீசார் குற்றவாளி முகமது சாஜித்தின் இருப்பிடம் அறிந்து கைது செய்ய முற்பட்டனர்.
ஆனால், போலீசாரை தாக்கி அங்கு இருந்து தப்பிக்க சாஜித் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் சாஜீத் மீது நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் கொலையாளி சாஜித்தை உயிரிழந்தான். சாஜித் சகோதரருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி சாஜித் சகோதரர் ஜாவேத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
“குடும்பத்தினரின் கூறியதன்படி குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த சிறுவர்களின் தந்தையிடம் 5,000 ரூபாய் கேட்டுள்ளார் என்றும், சாஜித் சகோதரர் ஜாவேத்தை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.” என்றும் அப்பகுதி எஸ்எஸ்பி படான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…