5000 ரூபாய் பணம்.? 2 சிறுவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்த கொடூரன்.! 

Badaun double murder

Badaun double murder : உத்தரப் பிரதேச மாநிலம் படவுனில் சலூன் கடை வைத்து இருக்கும் முகமது சாஜித், நேற்று (செவ்வாய்) இரவு 8 மணியளவில், தனது பக்கத்து வீட்டுக்காரர் வினோத் தாக்கூர் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மகன்கள் 13 வயதான ஆயுஷ், 6 வயதான அஹான் என இரு சிறுவர்களையும் கூரான ஆயுதத்தால் வெட்டியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் இரு சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர்.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பேச்சு… மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேலும்  வினோத்தின் மூன்றாவது மகன் பியூஷும் சஜித்தையும் கடுமையாக தாக்கியுள்ளான் அந்த கொலைகாரன். நல்வாய்ப்பாக பியூஸ் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளான். தற்போது சிறுவன் பியூஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த இரட்டை கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் சலூன் கடைக்கு தீ வைத்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராடினர். பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய உ.பி போலீசார் குற்றவாளி முகமது சாஜித்தின் இருப்பிடம் அறிந்து கைது செய்ய முற்பட்டனர்.

Read More – நெல்லையில் இருந்து கேரளா சென்ற வாகனம் மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்து! நால்வர் பலி

ஆனால், போலீசாரை தாக்கி அங்கு இருந்து தப்பிக்க சாஜித் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் சாஜீத் மீது நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் கொலையாளி சாஜித்தை உயிரிழந்தான். சாஜித் சகோதரருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி சாஜித் சகோதரர் ஜாவேத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

“குடும்பத்தினரின் கூறியதன்படி குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த சிறுவர்களின் தந்தையிடம் 5,000 ரூபாய் கேட்டுள்ளார் என்றும்,  சாஜித் சகோதரர் ஜாவேத்தை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.” என்றும்  அப்பகுதி எஸ்எஸ்பி படான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk