நீண்ட ஆயுள்.. ஆரோக்கியம்.. செல்வ செழிப்பான வாழ்க்கை.! கேரள நரபலி குறித்த திடுக்கிடும் தகவல்கள்…
கேரள மாநிலத்தை மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது கேரள நரபலி சம்பவம் தான். செல்வ செழிப்பாக வாழ வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும். நீண்ட ஆயுள் வேண்டும் என 2 பெண்களை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.
கேரளா திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் அதிக கடன் பிரச்சனையில் சிக்கியதால், போலி மந்திரவாதியான பெரும்பாவூரைச் சேர்ந்த முகமது ஷாபியிடம் தம்பதியினர் யோசனை கேட்டுள்ளனர்.
முகமது ஷாபி, நரபலி யோசனையை கூறி, இரு பெண்களையும் தானே ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். பின்னர், பகவல் சிங்கிடம் பணம் வாங்கி கொண்டு பத்மா மற்றும் ரோஸ்லின் எனும் லாட்டரி விற்கும் பெண்களை பூஜை என பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து வந்து, நரபலி கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில், ஜூன் மாதம் காணாமல் போன காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் காணவில்லை என அவரது குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். அதே போல பத்மா செப்டம்பர் மாதம் காணாமல் போயுள்ளார் அவரது குடும்பத்தாரும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இருவது மொபைல் போன் சிக்கனல்களும், பத்தனம்திட்டா (பகவல் சிங் வசித்து வந்த மாவட்டம்) மாவட்டத்தில் ஆப் ஆகியுள்ளது. பின்னர் போலீசார் விசாரணையில் இந்த நரபலி விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
நரபலி கொடுக்கப்பட்ட பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகியோரின் ரத்தத்தை எடுத்து வீடுகளில் தெளித்துள்ளனர். மேலும், அவர்கள் உடலின் சில பகுதிகளை வெட்டி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிடைக்கும் என போலி மந்திரவாதி கூறியதன் பெயரில் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் அவர்களது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டு வளாகத்தில் புதைத்துள்ளனர். இந்த திடுக்கிடும் தகவலைகளை பொலிசார் குற்றவாளிகளிடம் இருந்து பெற்றனர். அதன்பின்னர் குற்றவாளிகள் மூவரும் எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.