‘back to home’ – கேரள விமான விபத்தில் உயிரிழந்தவரின் இறுதி முக நூல் பதிவு!

Default Image

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவரின் இறுதி முக நூல் பதிவு.

துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ஷரஃபு பிலாசேரி என்பவர், துபாயில் இருந்து விமானம் கிளம்பும் போது, ‘back to home’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, தனது மகள் மற்றும் மனைவியுடன் முகத்தில் ஷீல்டுக்கு அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் கேரள மாநிலம் கோழிக்கூடு பகுதியை சேர்ந்தவர்.

இவரது பயணம் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், பயண இறுதியோ, அவரது வாழ்வின் இறுதி கோட்டிற்கு கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஷரஃபு பிலாசேரி உயிரிழந்த நிலையில், இவரது மகள் மற்றும் மனைவி இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்