பதவியேற்பு விழாவில் பங்கேற்ற குட்டி அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற விழாவில்,’ மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்படும் குழந்தை பங்கேற்றுள்ளது.
டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.மாறாக மக்கள் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.குறிப்பாக பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ‘மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்படும் குழந்தை டெல்லி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அன்று மிகவும் பிரபலமாக இருந்தார் .இந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதங்களில் அதிக அளவில் வைரலானது.
இந்நிலையில் இன்று இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார்.அரவிந்த் கெஜ்ரிவாலுடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.இந்த விழாவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் துப்புரவு பணியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.மேலும் இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் அவர் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டது.