“விமானத்தில் பலியான 11 மாத குழந்தை”விமானத்தில் நிகழ்ந்த சோகம்..!!
விமானத்தில் பயணம் செய்த 11 மாதக் குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்ததுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த 11 மாதக் குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்ததுள்ளது.தோஹாவில் இருந்து ஹைதராபாத் வந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் பெற்றோருடன் அர்னாவ் வர்மா ((Arnav Varma)) என்ற 11 மாதக் குழந்தையை விமானத்தில் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் விமானத்தில் வந்த போது நடுவழியில் குழந்தைக்கு தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதாகக் தெரிகிறது.விமானம் ஹைதராபாத்தை அடைந்ததும் விமானநிலையத்தில் உள்ள அப்போலோ மருத்துவ மையத்துக்கு குழந்தை அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. உயிரிழந்தது தொடர்பாக தெரிவித்த மருத்துவர்கள் மூச்சுத் திணறலால் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
DINASUVADU