ரயிலில் பயணிக்கும் தாய்மார்களுக்கு சூப்பரான வசதி.! மத்திய அமைச்சர் அறிவிப்பு.!
டெல்லி : இந்தியன் ரயில்வேயில் உள்ள ரயில் பெட்டி இருக்கைகள் அனைத்தும் பெரியவர்கள் வசதிக்கேற்ப படுக்கை வசதி அமைக்கப்பட்டு இருக்கும். ரயிலில் பச்சிளம் குழந்தைகளை அழைத்து செல்லும் தாய்மார்களுக்கு எதுவாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த இந்தியன் ரயில்வே துறை தற்போது புதிய முயற்சியை கொண்டுவந்துள்ளது
இதுகுறித்து இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பாஜக எம்பி சுமர் சிங் சோலங்கி இந்தியன் ரயில்வேயில் தாய்மார்கள் செல்லும் வகையில், படுக்கை வசதி ஏற்படுத்தி தருவது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
மத்திய அமைச்சர் கூறுகையில், குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் எளிதாக பயணிக்க எதுவாக, தற்போது சோதனை முயற்சி அடிப்படையில் லக்னோ எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேபி பெர்த்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், ரயில் எண். 12229/30 லக்னோ எக்ஸ்பிரஸில் ஒரு பெட்டியில் இரண்டு கீழ் பெர்த்துகளுடன் இரண்டு பேபி பெர்த்கள் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் பாராட்டு கிடைத்துள்ளது. இருப்பினும், இருக்கைக்குக் கீழே லக்கேஜ் வைக்க தடை மற்றும் பயணிகள் முழங்கால் முடக்குவதற்கு சிரமம் ஆகியவற்றை இந்த பேபி பெர்த் இருக்கை வசதியில் சுட்டிக்காட்டப்பட்ட இடையூறுகள் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.