அலுவலகத்தை இடித்த விவகாரம்.. தனது அலுவலகத்தை இடிப்பவர்களை பாக். ராணுவத்துடன் ஒப்பிட்ட கங்கனா ரனாவத்!
தனது அலுவலகத்தை இடிக்கும் படத்தை பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரனாவத், அலுவலகத்தை இடிப்பவர்களை பாக். ராணுவத்துடன் ஒப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் விசாரித்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது.
இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக, கரண் ஜோகர் தான் பாலிவுட் திரையுலகத்தின் மாஃபியா கும்பலின் முக்கிய குற்றவாளி என்று குற்றம்ச்சாட்டினார். அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உணருவதாக தெரிவித்தார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , கங்கனாவின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பயமாக இருந்தால் மும்பை மாநகரத்துக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் கங்கனா ரனாவத் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் பயமுறுத்தி வருகின்றனர். வருகின்ற 9 ஆம் தேதி நான் மும்பைக்கு வரவுள்ளேன். முடிந்தால் தடுத்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்காரணமாக கங்கனா, “செப்டம்பர் 9-ம் தேதி அன்று நான் மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். மும்பை விமான நிலையத்தை நான் அடையும் நேரத்தைப் பகிர்கிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்” என தெரிவித்துள்ளார். மேலும், அவர் மும்பைக்கு புறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டதால், மும்பையில் உள்ள கங்கனா ரனாவத்தின் அலுவலகம் இடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவுட்டுள்ளார். அந்த பதிவில் கங்கனா ரனாவத், தனது தனது அலுவலகத்தை இடிப்பவர்களை பாக். ராணுவத்துடன் ஒப்பிட்டார்.
Babur and his army ????#deathofdemocracy pic.twitter.com/L5wiUoNqhl
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
Pakistan…. #deathofdemocracy pic.twitter.com/4m2TyTcg95
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
மேலும், தனது வீட்டை சட்ட விரோதமாக கட்டவில்லை எனவும், கொரோனா பரவல் காரணமாக, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கட்டடங்கள் இடிப்பதை அரசாங்கம் தடை செய்துள்ளதாகவும், பாலிவுட் இப்போது பாருங்கள், இதுதான் பாசிசம் போல் தெரிகிறது என மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
There is no illegal construction in my house, also government has banned any demolitions in Covid till September 30, Bullywood watch now this is what Fascism looks like ????#DeathOfDemocracy #KanganaRanaut
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
மற்றொரு பதிவில், தான் தவறானவள் இல்லை எனவும், எனது எதிரிகள் அதனை நிரூபித்து கொண்டே இருந்ததாகவும், இதனால்தான் மும்பை இப்பொழுது POK-ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
I am never wrong and my enemies prove again and again this is why my Mumbai is POK now #deathofdemocracy ???? pic.twitter.com/bWHyEtz7Qy
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020