பாபர் மசூதி வழக்கு.. நாளை தீர்ப்பு

Default Image

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

17 பேர் இறந்து விட்டதால் 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தது. இந்நிலையில், லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேரிடம் விசாரணை முடிந்தது. அதே நேரத்தில் வழக்கு நடவடிக்கைகளை முடித்து, தீர்ப்பு வழங்க மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் அறிக்கை அனுப்பினார்.

இதை பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து மேலும் ஒரு மாத காலம் அவகாசம் ( அதாவது செப்டம்பர் 30-ந் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், பாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Watermelon - sathish kumar
mk stalin modi
PMK MLA Metur Sadhasivam - BJP State president Annamalai
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump