பாபர் மசூதி வழக்கு.! இன்று அத்வானியிடம் வாக்குமூலம்!
உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை கடந்த 2001 ஆம் ஆண்டு அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தது. இந்நிலையில்,பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 31-க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக தலைவர் உமா பாரதி ஆகியோர் நேரில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் முரளிமனோகர், அத்வானியை ஆகியோரிடம் வாக்குமூலம் பெற உள்ளனர்.
அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று காணொலி வாயிலாக நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளார்.