பாபா சாகேப்பின் கனவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது – ராகுல் காந்தி
பாபா சாகேப்பின் கனவு இன்னும் வெகுதொலைவில் உள்ளது. ஆனால், அதனை நாங்கள் விரைவில் அடைவோம்.
இன்று அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நாட்டின் முக்கிய தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’இன்று பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம். நாட்டில் அதிகரித்து வரும் அநீதி, வன்முறை மற்றும் பாகுபாடுகளைப் பார்க்கும்போது இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாக நினைக்கிறேன். பாபா சாகேப்பின் கனவு இன்னும் வெகுதொலைவில் உள்ளது. ஆனால், அதனை நாங்கள் விரைவில் அடைவோம். அவருக்கு எனது பணிவான அஞ்சலி’ என்று பதிவிட்டுள்ளார்.
आज बाबा साहेब का महापरिनिर्वाण दिवस है। जब देश में बढ़ता हुआ सामाजिक अन्याय, हिंसा और भेदभाव देखता हूँ तो सोचता हूँ कि अभी बहुत काम बाक़ी है- बाबा साहेब का सपना अब भी दूर है।
लेकिन हम वहाँ तक ज़रूर पहुँचेंगे।उन्हें मेरी विनम्र श्रद्धांजलि। #BabaSahebAmbedkar pic.twitter.com/HuowsHJb0C
— Rahul Gandhi (@RahulGandhi) December 6, 2021