B.E. வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்கலாம் – ஏஐசிடிஇ

B.E. மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் 3 ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசு தேர்வுகளும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஜூன் மாதம் வரை நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பின்னர் இதனால் மாணவர்கள் மீண்டும் பள்ளி, கல்லூரி எப்போது திறக்கப்படும் என்றும் தேர்வுகள் நடைபெறுமா? என்று குழப்பத்தில் உள்ளனர். ஒரு சில இடங்களில் ஊரடங்கு முடித்ததும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சில நுழைவு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு ஜூலை 26ம் தேதியும், JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய B.E. மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ (All India Council For Technical Education) தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடத்தலாம் என்றும் ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025