அயோத்தி தீர்ப்பு : காங்கிரஸ் கட்சி ஆதரவு
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சன்னி வக்ஃபு வாரிய அமைப்பிற்கு 3 மாதங்களுக்குள் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வழங்கப்படவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.