அயோத்தி ராமர் கோயில்.! அழைப்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.!

PM Modi

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அமைப்பு  சார்பில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த கட்டுமான பணிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 2024 ஜனவரி மாதம் 22ஆம் தேதி இதன் திறப்பு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்வானது ஜனவரி 14 சங்கராந்தி தினத்தன்றே துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

37 வது தேசிய விளையாட்டுப் போட்டி..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

ராமர் கோவில் முன்பு பிரமாண்ட ராமர் சிலை ஒன்றும் நிறுவப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க ராமர் கோவில் கட்டுமான குழு பிரதமர் இல்லத்திற்கு சென்றனர்.

இந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில், இன்று உணர்வுப்பூர்வமான நாள். ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ராவை சேர்ந்தவர்கள் என்னை சந்திக்க இல்லத்துக்கு வந்திருந்தனர். ராமர் கோவில் திறப்பு விழாவை பற்றியும்,, திறப்பு விழாவுக்கு வருமாறும் என்னை அழைத்தனர். ராமர் கோவில் திறப்பு விழாவை காண்பது என் வாழ்வில் வரலாற்று நிகழ்வு. இது எனது அதிர்ஷ்டம். என பதிவிட்டு உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்