அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அறிவிப்பு.!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், 2024 ஜனவரி 14ம் தேதி மகா சங்கராந்தி அன்று கோயில் திறப்பு விழா நடைபெறும்.
தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கும், இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார். மொத்த விழாவையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார்.
கோவில் கட்டிடக்கலை நாகரா பாணியில் உள்ளது. இதில் 46 தேக்கு மர கதவுகள் இருக்கும். கருவறையின் கதவு தங்கத்தால் ஆனதாக இருக்கும். ‘கோவில் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு நிற்கும்’ என கட்டுமானக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவில் மூன்று ஏக்கரில் கட்டப்படும் அதே வேளையில், 9 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வளாகத்தை சுற்றி ஒரு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். சுவரில் ராமாயணத்தை விளக்கும் சிற்பங்கள் போரடிக்கப்பட்டிருக்கும். கோவிலின் மூன்று வாயில்களும் கோபுரமும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும்.
இந்த கோயில் வளாகத்தில் யாத்திரை வசதி மையம், அருங்காட்சியகம், காப்பகங்கள், ஆராய்ச்சி மையம், ஆடிட்டோரியம், கால்நடைக் கொட்டகை, சடங்குகளுக்கான தளம், நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கான தங்குமிடம் ஆகியவை அமைகிறது.