அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கட்டுமான பணிகள் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அயோத்தியில் சுமார் 1,100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி அவர்கள் கலந்துகொண்டு செங்கல் எடுத்து வைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த ராமர் கோவில் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ராமர் கோவிலை கட்டி முடித்து பக்தர்களுக்காக திறந்து வைக்க வேண்டும் என கோவில் அறக்கட்டளை தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராமர் கோவிலில் விறுவிறுப்பான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ராமர் கோவில் கட்டுமான பணி 2025 ஆம் ஆண்டு தான் முழுமையாக முடியும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அயோத்தி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் ராமர் கோவிலின் மாதிரியை பார்வையிட்டு தரிசனம் செய்து உள்ளார். அதன் பின்பதாக ராமர் கோவிலில் நடைபெற்று வரக்கூடிய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், அயோத்தி ராமஜென்ம பூமி தளத்திற்கு சென்று பிரார்த்தனையும் செய்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…