அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி : முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு!

Default Image

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கட்டுமான பணிகள் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அயோத்தியில் சுமார் 1,100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான ராமர்  கோவில் கட்டப்பட்டு வருகிறது.  இந்த ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி அவர்கள் கலந்துகொண்டு செங்கல் எடுத்து வைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த ராமர் கோவில் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ராமர் கோவிலை கட்டி முடித்து பக்தர்களுக்காக திறந்து வைக்க வேண்டும் என கோவில் அறக்கட்டளை தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராமர் கோவிலில் விறுவிறுப்பான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ராமர் கோவில் கட்டுமான பணி 2025 ஆம் ஆண்டு தான் முழுமையாக முடியும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அயோத்தி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் ராமர் கோவிலின் மாதிரியை பார்வையிட்டு தரிசனம் செய்து உள்ளார். அதன் பின்பதாக ராமர் கோவிலில் நடைபெற்று வரக்கூடிய  கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், அயோத்தி ராமஜென்ம பூமி தளத்திற்கு சென்று பிரார்த்தனையும் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்