களைகட்டும் அயோத்தி கும்பாபிஷேக விழா.! தவிர்க்கும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.!
இந்து கடவுள்களில் ஒருவராக இருக்கும் ஸ்ரீ ராமர் பிறந்த இடமாக உத்திரபிரதேச மாநிலம், அயோத்தி கருதப்படுகிறது. ராமர் பிறந்த ஊரில் அவருக்கு ஒரு பிரமாண்ட கோயில் கட்ட மத்திய பாஜக அரசு முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான வேலைகளை முழுவீச்சில் ஆரம்பித்தது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வரும் ஜனவரி மாதம் இதன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
வரும் ஜனவரி 22, 2024இல் ராமர் கோயில், பிரான் பிரதிஷ்டா (Pran Pratishtha) விழா வெகு கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான முழு ஏற்பாடையும் ராமர் கோயிலை கட்டி முடித்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. அதன் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா பல்வேறு அரசியல் தலைவர்ளுக்கு ராமர் கோயில், பிரான் பிரதிஷ்டாவுக்கான அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்.
மசூதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி..!
சுமார் 6000 பேர் இந்த விழாவுக்கு வர அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய முக்கிய பாஜக தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி , மேற்கு வங்க முதலவர் மமதா பேனர்ஜி, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெய்சூரி என பலருக்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அமைப்பினர் அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.
அதே போல, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா , முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் என பலருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் இந்த விழாவுக்கு வரமாட்டார்கள் என்பதை அக்கட்சி செய்தி தொடர்பாளரே மறைமுகமாக கூறிவிட்டார். அதில், எங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்ததற்கு நன்றி. எங்கள் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். எங்கள் நிலை என ஜனவரி 22இல் மக்களுக்கு தெளிவாக தெரியும் என குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியை போலவே, காங்கிரஸ் உடன் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல அக்கட்சின் மூத்த தலைவர் டி.ராஜாவும் விழாவில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
6000 பேருக்கு அழைப்பு விடுத்த போதும், பெரும்பாலும் முக்கிய விவிஐபிகள் விழாவுக்கு வரவுள்ளதால், ஜனவரி 22 அன்று பொதுமக்கள் அயோத்தி கோயிலில் தரிசனம் செய்ய மாத்திக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் அருகில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.