#2019 RECAP: அயோத்தி வழக்கும் – தீர்ப்பும் .!

Published by
murugan

நிலம் கொண்டாடுவதில் பிரச்சினை :

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய  2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.

அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு :

நில பிரச்சினை காரணமாக ,2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு :

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் சமரசமான தீர்வு காணவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட சமரசக்குழுவை  அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

சமரச குழுவால் தீர்வு காண முடியவில்லை :

ஆனால் அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண இயலவில்லை அயோத்தி விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் தொடர் விசாரணை : 

இதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ,நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும்  அறிவித்தார். இதனால் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வந்தது.40 நாள் தொடர் விசாரணை முடிந்த பின்பு  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

விரைவாக விசாரிக்க வாய்ப்பு :

ஆனால் இதற்கு இடையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம்  நவம்பர் 17-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அயோத்தி தீர்ப்பு:

அயோத்தி வழக்கில் நவம்பர் மாதம் 09-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் எனஉத்தரவு விட்டது.மேலும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

 

Published by
murugan

Recent Posts

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

8 minutes ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

2 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

3 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

4 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

4 hours ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

4 hours ago