தற்காலிக சிறைகளாக மாறி வரும் உத்திர பிரதேச பள்ளிக்கூடங்கள்! உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு தயாராகும் உ.பி முதல்வர்!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதால் அதற்க்குள் தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்த்து மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அயோத்தி தீர்ப்பு வருவதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் உத்திர பிரசேன மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்ட ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 24 மணிநேரமும் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு அறை, எந்நேரமும் தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்,
சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியை கண்காணிக்க சிறப்பு காவல் அதிகாரிகள், இதற்கு மேலாக, அக்பர்பூர், தண்டா, ஜலால்பூர், ஜெய்த்பூர், பைதி மற்றும் அல்லாபூர் ஆகிய ஊர்களில் 8 முக்கிய பள்ளிக்கூடங்களில் தற்காலிக சிறை ஆகியவற்றை உபி முதல்வர் சட்ட ஒழுங்கை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.