அயோத்தி தொடர்பான வழக்கில் இன்று (ஜனவரி 10) முதல் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து13-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.இந்த வழக்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் அமர்வு விசாரித்து வந்தது. தீபக் மிஸ்ரா அண்மையில் ஓய்வு பெற்றார்.இதைத் தொடர்ந்து தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் இடம்பெற்றுள்ளனர். புதிய அமர்வு முன்பு அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கு விசாரணை வரும் 2019 ஜனவரியில் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் அயோத்தி தொடர்பான வழக்கில் இன்று முதல் விசாரணை நடைபெரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.அயோத்தி வழக்கை இன்று புதிய அமர்வு விசாரிக்கும். புதிய அமர்வில் பாப்தே, ரமணா, யு.யு.லலித் மற்றும் சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் உள்ளனர் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…