அயோத்தி வழக்கு ..!அக்டோபர் 29 ஆம் தேதி முதல் விசாரணை ..!
அயோத்தி வழக்கை அக்டோபர் 29 ஆம் தேதி முதல் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் துணை வழக்கு ஒன்றில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகளில் அசோக் பூஷன்,தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழக்கியுள்ளனர்.நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு வழங்குவார்.
இந்நிலையில் அசோக் பூஷன்,தீபக் மிஸ்ரா தீர்ப்பில் ,மசூதிக்கு சென்று தொழுகை செய்தல் இஸ்லாமின் ஒருங்கிணைந்த முறையா என்பதை பெரிய அளவில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை.அதாவது அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தேவையில்லை.அக்டோபர் 29 ஆம் தேதி முதல் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.