அயோத்தி வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கினை இன்று முதல், 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது. அயோத்தியில், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.
அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள, 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…