அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி! உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?!

Published by
மணிகண்டன்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கினை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தனர். அதில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் இதோ!

  • மீர்பாகி என்பவரால் பாபர் கோவில் கட்டப்பட்டது. .
  • காலியாக இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை.
  • மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்கிறது.
  • மத நம்பிக்கை அடிப்படையில் நிலத்தின் மீதான உரிமையாளர் யார் என கூறிவிட முடியாது.
  • மதங்களில் இருக்கும் இறைநம்பிக்கைகளில் உச்சநீதிமன்றம் தலையிடாது.
  • சர்ச்சைக்கு உரிய இடத்தின் மையப்பகுதியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
  • மசூதி கட்டப்பட்ட இடத்திற்கு கீழே உள்ள கட்டிடம் முஸ்லீம் கட்டுமானம் அல்ல என தொல்லியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
  • கோவில் இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என எந்தவித ஆதாரமும் தொல்லியல் துறை வசம் இல்லை.
  • தொல்லியல் துறை தரவுகளை ஒதுக்கிவிட முடியாது. – உச்சநீதிமன்றம்
  • சர்ச்சைக்குரிய இடத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
  • ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே ராமர், சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
  • சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை என்கிற வாதம் நிராகரிக்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது.
  • நிலத்தின் உட்பகுதியில் இஸலாமியர்கள் தொழுகை நடத்தி வந்துள்ளனர்.
  • சன்னி வக்ஃபு முஸ்லீம் அமைப்பிற்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும்.

அயோத்தியில் உள்ள அந்த குறிப்பிட்ட 2.77 ஏக்கர் நிலம் ராமஜென்ம அமைப்பான இந்து அமைப்புக்கே சொந்தம் எனவும், அங்கு கோவில் கட்டுவதைக்காக 3 மாதத்திற்குள் மத்திய அரசானது அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Published by
மணிகண்டன்

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

4 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

4 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

5 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

6 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

7 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

8 hours ago