நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கு ! இன்று வெளியாகிறது தீர்ப்பு
நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிறது உச்சநீதிமன்றம்.
அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில்,அயோத்தி வழக்கில் 40 நாட்கள் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது.இந்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த பின்பு அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் வட மாநிலங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீர்ப்பை கூறப்போகும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ,அயோத்தி தீர்ப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.
பின்பு அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது என்று அறிவிக்கப்பட்டது.5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று வழக்கு பட்டியல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாவதையொட்டி அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .தீர்ப்பு வெளியாகவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144தடை அமலில் உள்ளது .மாநில அரசுகள் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே உள்துறையும் அறிவுறுத்தியுள்ளது.