புதியதாக கண்டறியப்பட்டுள்ள ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் பரவி வரும் ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ICMR ஆய்வை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருவரை 10 பேருக்கு ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மஹாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா மாதிரிகளை பரிசோதனை செய்யபோது ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா கண்டறியப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இந்தூர் சுற்று வட்டாரங்களில் 6 பேருக்கு ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏ.ஒய் 4.2 என்பது சார்ஸ் கோவிட்2 வைரஸின் டெல்டா மறுபாட்டின் துணை பிரிவு என்றும் மிக வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து இல்லை என்று ICMR தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா பிரிட்டனில் அதிகம் பரவுகிறது. இதனால், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் இருந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் முககவசம் , தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…