பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர்!
பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில், உரி பகுதியை சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார். மேலும், ஒரு ஆனந்ராயது செயலியையும் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை நான் 15 நாட்களில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், 3 மாதங்கள் ஆகி விட்டது. இந்த வெப்சைட் மட்டுமன்றி இந்த செயலையும் மாணவர்களுக்கு உபயோகமாக இருப்பதாகவும், பள்ளியின் மற்ற ஆசிரியர்களு இதற்க்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வெப்சைட்டில் மாணவர் சேர்க்கைக்கான வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.