கோவா டிசைனர் உருவாக்கிய அட்டகாசமான மாஸ்க்!
கோவா டிசைனர் உருவாக்கிய அட்டகாசமான மாஸ்க்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், கோவாவை சேர்ந்த தீபக் பதனியா என்ற டிசைனர் ஒருவர் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளார். முகம் முழுவதும் பாதுகாப்பாக மூடுவது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த மாஸ்க் குறித்து அவர் கூறுகையில்,’முகமூடிகள் போன்று தற்போது இருக்கும் மாஸ்குகள் எளிதில் நழுவி விடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மாஸ்க்கும் அணிய வேண்டும்.
இதில் இரண்டுமே உள்ளது. பேசும்போது புரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பேசும் வார்த்தைகள் தெளிவாக இருக்கும். எளிதில் சுத்தப்படுத்தவும் முடியும். எதிர்காலத்தில், இதில் மின்னனு வடிகட்டிகளை சேர்க்கும் திட்டமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.