அருமை…”இளைஞர்களுக்கு அரசு வேலை…வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை” – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!
கோவாவில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
Hon’ble Delhi CM & AAP National Convenor Shri @ArvindKejriwal‘s Important announcement for the youth of Goa | LIVE #KejriwalKiJobGuarantee https://t.co/UsSXIRAbnA
— AAP (@AamAadmiParty) September 21, 2021
மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
- “கோவாவில் ஒருவர் அரசாங்க வேலையை விரும்பினால், அவர்கள் எந்த அமைச்சரையும், எம்எல்ஏவையும் தெரிந்து கொள்ள வேண்டும்.லஞ்சம்/பரிந்துரை இல்லாமல் கோவாவில் அரசு வேலை பெற முடியாது என்று இளைஞர்கள் என்னிடம் சொன்னார்கள்.
- கோவாக்களுக்கான வேலைகள், எம்எல்ஏவின் உறவினர்களுக்கு அல்ல.எனவே,கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், ஊழல் செயல்களை நிறுத்தி,கோவாவின் ஒவ்வொரு வீட்டிலும் வேலைவாய்ப்புள்ள ஒரு இளைஞருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்வோம்.
- வேலை கிடைக்கும் வரை அவர்களுக்கு மாதம் ரூ.3000 வேலையில்லாத் தொகை நிவாரணமாக வழங்கப்படும்.
- 80% வேலைகள் கோவா இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும்.
- 80% தனியார் வேலைகளையும் கோவா இளைஞர்களுக்கு ஒதுக்க நாங்கள் சட்டம் கொண்டு வருவோம்.
- கொரோனா காரணமாக சுற்றுலாவை வேலையை சார்ந்துள்ள குடும்பங்கள் வேலையில்லாமல் போனது, அவர்களின் வேலை மறுசீரமைப்பு செய்யப்படும் வரை அவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்.
- சுரங்கங்களை மூடுவதால் சுரங்கத்தை சார்ந்திருக்கும் குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றன, சுரங்கம் மீண்டும் தொடங்கும் வரை அவர்களுக்கும் மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்.
- கோவாவில் ஒரு திறமையான பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம், அங்கு 12 ஆம் வகுப்புக்குப் பிறகு குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான திறமையைக் கற்றுக்கொள்ள முடியும், இதனால் அவர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.
#KejriwalKiJobGuarantee FOR GOA’s YOUTH!
▪️Jobs for Goans, not for MLA’s relatives
▪️1 Job/family guaranteed
▪️3000/month until then
▪️80% pvt jobs reserved for Goans
▪️5000/month for unemployed due to COVID in tourism
▪️5000/month for mining ban affected
▪️Skill University— AAP (@AamAadmiParty) September 21, 2021
மேலும்,நீங்கள் “உண்மையான கட்சிக்கு” வாக்களிக்கும்போது “டூப்ளிகேட்” க்கு ஏன் வாக்களிக்க நினைக்க வேண்டும்? என்றும் கூறியுள்ளார்.
Why vote for “Duplicate” when you can vote for the “Original”?
– CM @ArvindKejriwal on BJP’s CM Sawant COPYING Free water & Doorstep services scheme of Delhi Govt#KejriwalKiJobGuarantee pic.twitter.com/jIdThu7mym
— AAP (@AamAadmiParty) September 21, 2021