அறிவிப்பு வெளியானது… தேசிய வீரதீர விருது… சிறுவர்கள்,சிறுமியர்கள் தேர்வு..
- இந்தியாவில் குழந்தைகள் நல அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் தேசிய வீரதீர விருதுக்கான சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்து வருகிறது.
- இந்த முறை விருது பெறும் வீர தீரர் உங்களுக்காக.
இந்நிலையில், கடந்த 2019 ம் ஆண்டிற்கான இவ்விருது 10 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், இக்கட்டான சூழலில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியவதற்க்காக இவ்விருது பெறுகின்றனர். இதன் மூலம் சிறுவர்களிடையே வீரதீர செயல், மற்றவர்களுக்கு உதவும் பண்பும் மணப்பாண்மையும் வளர்கிறது.கேரளாவை சேர்ந்த இவ்விருது பெற்ற ஆதித்யா என்பவர் கூறுகையில், ‛2019 மே மாதம் நேபாளத்தில் மலைப்பகுதியில் இருந்து இந்தியாவிற்கு பேருந்தில் வந்துகொண்டு இருந்தபோது, டீசல் கசிவு ஏற்பட்டதை உணர்ந்து கூறினேன். பஸ் திடீரென தீ பிடித்தது. இந்திய எல்லையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. சுத்தியலின் உதவியால் கண்ணாடி உடைக்கப்பட்டு 40 பயணிகள் வெளியே தப்பினர். சிறிது நேரத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது. 40 மாணவர்களை காப்பாற்றியதற்காக எனக்கு விருது கிடைத்தது’ என்றார். இதுபோன்ற சம்பவங்களில் சிறப்பாக செயல்படும் சிறுவர்ளின் செயலை அனைவரும் அறயும் வண்ணம் இதுபோன்ற விருது வழங்கப்படுகிறது.